புலிக்குத்தி பாண்டி திரைப்படம்

 புலிக்குத்தி பாண்டி திரைப்படம்

ஞாயத்திற்காக அதிரடி செய்யும் நாயகன் (விக்ரம் பிரபு), இவர் செய்யும் அதிரடியால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பாதிக்கப்படும் நாயகனின் குடும்பம். இவரை திருத்தி நல்வழிப்படுத்தி அமைதியாக வாழும் நாயகி (லட்சுமி மேனன்). நாயகனை குடும்பத்தோடு பழிவாங்க துடிக்கும் நாயகனின் விரோதிகள். பின் என்ன நடந்து என்பதே திரைப்படம்.

கதை: அதிரடி மற்றும் பஞ்சாயத்து செய்து வரும் சமுத்திரக்கனி, சிலர் அறிமுகத்தில் ஒரு கும்பலுக்கு பஞ்சாயத்து
செய்ய செல்கிறார். அங்கு ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைக்கு காரணம் சமுத்திரக்கனி என சூழ்ச்சி செய்து இவரை மாட்டிவிடுகின்றனர். இதற்காக சமுத்திரக்கனிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது.

சமுத்திரக்கனியின் மகன் பாண்டி (விக்ரம் பிரபு), அவரை போன்று அதிரடி செய்து வருகிறார். விக்ரம் பிரபு ஒரு நல்ல நோக்கத்தோடு, நல்லவர்களுக்காக அதிரடி செய்கிறார். இவரின் நல்ல பண்புகளை கண்டு காதலிக்கும் நாயகி பேச்சி (லட்சுமி மேனன்). தான் காதலித்த படி நாயகன் விக்ரம் பிரபுவை திருமணம் செய்துக்கொள்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் விக்ரம் பிரபுவை நல்வழிப்படுத்தி குடும்பத்தோடு அமைதியாக வாழ்கிறார், லட்சுமி மேனன். ஆனால் விக்ரம் பிரபுவின் விரோதிகள் இவரை பழிவாங்க துரத்துகின்றனர். ஒரு கட்டத்தில் எதிரிகள் விக்ரம் பிரபுவை சூழ்ச்சி மூலம் கொலை செய்கின்றனர். பின்னர் என்ன நடந்து என்பதே இப்படத்தின் சுவாரஸ்யமுள்ள திரைக்கதை.

 

கருத்துகள்